திருச்சி மாவட்டம் - ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் மூலம் தமிழக அரசுக்கு பல வழிகளில் பல நூறு கோடி வருமானம் கிடைத்து வருகிறது. தினமும் இங்கு அரங்கனின் அருள் பெற ஆயிரக்கணக்கில் வெளி மாநில- வெளியூர் - உள்ளூர் மாவட்ட மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு மக்களுக்கான - பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் பூஜ்யம் அளவில் தான் உள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கா - ரங்கா கோபுர நுழைவு வாசலில் சித்திரை தேருக்கு எதிரில் உள்ள இலவச காலணிகள் - பொருட்கள் வைக்கும் அறையில் நடைபெறும் அலங்கோல நிர்வாகத்தில் வெளியில் சிதறி கிடக்கும் பக்தர்களின் காலனிகள். இங்கு பணிபுரியும் ஊழியர்களின் அடாவடி பேச்சு - ஒரு சிலரிடம் காலணி வைக்க பணம் கேட்பது - பொறுப்பு இல்லாமல் பதில் சொல்வது, ஒழுங்கில்லாமல் சிண்டிகேட் போட்டு வசூலில் ஈடுபடுவது போன்றவற்றால் இங்கு வரும் பக்தர்களின் உடமைகள் குறிப்பாக காலணிகள் - ரோட்டில் சிதறி - அவை காணமல் போகும் அவலம் நடந்தேறுகிறது. அடுத்ததாக இங்கு கோவலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இங்கு முறையான வாகன நிறுத்துமிடம் கிடையாது.கோவிலுக்கு வரும் வாகனங்கள் தனியார் பார்க்கிங்கில் நிறுத்தும் அவலம் - மேலும் கோவிலுக்கு வரும் வாகனங்களுக்கு ஸ்ரீரங்கம் போக்குவரத்துகாவல் துறை - No - Parking - பைன் என்ற பெயரில் அடாவடி வசூல் - இதனால் இங்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் வேதனையுடன் திரும்பி செல்வது.... பல கோடி வருமானம் வரும்
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்களுக்கு முறையான கழிவறை வசதி கிடையாது. முன்புறம் - தெற்கு உத்திரவீதியில் உள்ள ஒரே ஒரு இலவச கழிவறை மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. அங்கேயும் இலவசம் என்று கூறி ஊழியர்கள் கட்டணம் வசூல் செய்வதாக புகார் வருகிறது. வடக்கு வாசல் பகுதியில் உள்ள கழிவறை போதிய பராமரிப்பு இன்றி பக்தர்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. பல சமயங்களில் அங்கு கழிவறை கழிவுநீர் தெருக்களில் ஒடும் அவலம்....
கோவலுக்கு உள்ளே பாதுகாப்பான - தூய்மையான குடிநீர் முறையாக கிடைக்கவில்லை என பக்தர்கள் புகார்.
ஸ்ரீரங்கம் கோவிலின் உள்ளே கோவில் பிரசாதம் என்ற பெயரில் வாயிலே வைக்க முடியாத - கெட்டுப்போன உணவு பதார்த்தங்களை விற்பதாகவும் - அங்கு குடிநீர் பாட்டில்களை அதிக விலைக்கு விலைக்கு விற்பதால் இவர்களுக்காக கோவில் நிர்வாகம் இவர்களின் தண்ணீர் பாட்டில் விற்பனைக்காக பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலவச குடிநீர் குழாய்களை முறையாக பராமரிப்பதில்லை - அதில் தண்னீர் தினமும் தடையின்றி வழங்கவதில்லை என பக்தர்கள் புலம்பி செல்கின்றனர்.
கோவிலின் உள்ளே ஊனமுற்றவர்கள் - வயதான மூத்த குடிமக்களுக்கு இலவசமாக ஏற்றி செல்ல வழக்கப்பட்ட பேட்டரி கார்கள் - வீல் சேர் நாற்காலிகள் இன்று காசு கொடுப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் அவலம்.....
பக்தர்கள் அதிகமாக வந்து செல்லும் நான்கு உத்திரவீதிகளிலும் பல நேரங்களில் தெரு விளக்குகள் எரிவதில்லை. இந்த பகுதி முழுவதும் தனியார் லாட்ஜ் களாக மாறி வரும் வரும் அவலம்....
தமிழக அரசு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் செலுத்தும் முடிகாணிக்கை முற்றிலும் இலவசம் என்று அறிவித்துள்ளது - ஆனால் இங்கு ஸ்ரீரங்கத்தில் வடக்கு வாசல் - அம்மா மண்டபம் இரு இடங்களிலும் உள்ள கோயிலுக்கு முடிகாணிக்கை செலுத்தும் இடங்களில் ஒவ்வொரு மொட்டைக்கும் ரூ.100/= கொடுத்தால் தான் மொட்டையே அடிக்கப்படும்.
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் காவேரியில் குளித்து நிராடி - வரச் சென்றால் இன்று அங்கு அம்மா மண்டபம் பக்தர்களுக்கு குளிப்பதற்கு தகுதியற்று - கருமாதி செய்யும் மண்டபமாக - படித்துறையாக மாறிவிட்டது.
அதோடு மட்டுமில்லை அங்கிருந்து பக்தர்கள் நடந்து கோவிலுக்கு வருவதற்குள் படும் பாடு - ஸ்ரீரங்கம் பஸ் ஸ்டாண்ட் முதல் - போலிஸ் ஸ்டேஷன் - முரளி காபி கடை - ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முதல் ரங்கா ரங்கா கோபுரம் வரை ஏற்பட்டுள்ள நடைபாத ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் பயமின்றி - அச்சமின்றி கோவிலுக்கு நடந்து வரவே அச்சப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
ஸ்ரீரங்கம் - மற்றும் வெளியூர் பக்தர்களுக்கு முக்கியமான போக்குவரத்துக்கு பயன்பட்டு வந்த கீழவாசல் தாமோதர கிருஷ்ணன் கோவில் கோபுரம் மராமத்து என்ற பெயரில் பல வருடங்களாக பூட்டிக் கிடப்பதால் பக்தர்கள் படும் துயரம் சொல்ல முடியாதது .. இது என்று தான் திறக்கப் போகிறதோ..
இது போன்று இன்னும் பல உள்ளன.
இதையெல்லாம் களையெடுத்து - ஸ்ரீரங்கம் வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டிய ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் - தனது வசூல் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதாக ஸ்ரீரங்கம் மக்களும் - பக்தர்களும் புகாராக தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீரங்கம் கோவிலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக அறநிலையத்துறை தமிழகம் முழுவதும் பல கோயில்களுக்கு பலநூறு கோடிகளில் கும்பாபிஷேகம் நடத்துகிறோம் என்று மார்தட்டி கொள்வதிலேயே நிற்காமல் ஸ்ரீரங்கம் போன்ற அரசுக்கு தொடர் வருமானம் தரக்கூடிய கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு முறையான இலவச வாகன நிறுத்துமிடம் - கழிப்பிட வசதி - இலவச காலனிகள் - பொருட்கள் வைக்கும் இடம் - தூய்மைமையான இலவச குடிநீர் - பக்தர்கள் ஓய்வெடுத்து - தங்கி செல்ல வசதிகள் - வயதானவர்களுக்கு பேட்டரி கார் வசதி போன்றவைகள் முறையாக செய்து கொடுத்தாலே போதும் மக்களிடையே அரசுக்கும் - HRCE -க்கும் நற்பெயர் உண்டாகும்.
ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தந்து - அவர்களின் உடமைகளை - வாகனங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கும் - தமிழக HR CE - அமைச்சருக்கும் - ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்திற்கும சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை வைதிருக்கிறார்கள்..
உடனடி நடவடிக்கை எடுக்குமா? தமிழக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் ... ??????
0 Comments