15.07.2025
பீமநகர் - மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் A. R. சிராஜூதீன் அவர்கள் தலைமை தாங்கினார். அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருமதி. மல்லிகா பெரியநாயகி அவர்கள் மாணவர்களிடையே சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அய்யனார் புது பாத்திரக்கடை உரிமையாளர் மாரீசன் அவர்கள் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பரிசுகள் அளித்தார்.
மேலும் பள்ளியின் முன்னாள் மாணவர் மற்றும் அக்னி சிறகு மாத இதழின் ஆசிரியருமான முகமது இக்பால் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். பள்ளி மாணவர்கள் காமராசர் அவர்களைப் பற்றி மாணவர்களிடையே உரையாற்றினர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் தலைமையாசிரியரின் வழிகாட்டலில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். நிறைவாக ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் திருமதி. ஆனி மார்கிரேட் அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.
0 Comments