மதுரை மாநகராட்சி ”இசையோடு ருசியோடு விளையாடு” நம்ம ஊரு திருவிழா ! நமக்கான பெருவிழா ! ஆணையாளர் திருமதி.சித்ரா விஜயன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மதுரை மாநகராட்சி மற்றும் ஹலோ ஈவன்ட்ஸ் இணைந்து தமுக்கம் மைதானத்தில் இசையோடு ருசியோடு விளையாடு நம்ம ஊரு திருவிழா, நமக்கான பெருவிழாவினை மாநகராட்சி ஆணையாளர் திருமதி.சித்ரா விஜயன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.08.2025) தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
மதுரை மாநகராட்சி மற்றும் ஹலோ ஈவன்ட்ஸ் இணைந்து தமுக்கம் மைதானத்தில் 15.08.2025 முதல் 17.08.2025 வரை மாலை 4 மணி முதல் 9 மணி வரை மூன்று நாட்கள் ”இசையோடு ருசியோடு விளையாடு நம்ம ஊரு திருவிழா, நமக்கான பெருவிழா” என்ற தலைப்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இசையோடு ருசியோடு விளையாடு நிகழ்வின் தொடக்க விழாவினை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தொடங்கி வைத்து இசை நிகழ்ச்சியை பார்வையிட்டார்கள். இன்றைய நிகழ்வில் குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி, கொழு கொழு குழந்தைகள் போட்டி மற்றும் பாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் பல்வேறு குழந்தைகள் கலந்து கொண்டு தங்களை திறமைகளை வெளிப்படுத்தினார்கள். மேலும் பல்வேறு போட்டிகள் நாளை மற்றும் நாளை மறுநாள் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. வெற்றி பெற்றவர் களுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் கல்வி அலுவலர் திரு.ஜெய்சங்கர், உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக், மக்கள் தொடர்பு அலுவலர் திரு.மகேஸ்வரன் ஹலோ ஈவண்ட்ஸ் நிறுவனர் திரு.செந்தில், டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் திரு.குமார், தனியார் பங்களிப்பார்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள், குழந்தைகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்
0 Comments