NEWS UPDATE *** ஸ்டாலினுக்கு பின் உதயநிதி தான் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார். அமித்ஷாவால் அதனை தடுக்க முடியாது" - அமைச்சர் ரகுபதி *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி தில்லை நகரில் திமுகவினரின் அரசியல் தலைமை யூடியூப் சேனல் அலுவலகம் திறப்பு !





திருச்சி தில்லைநகரில் மேற்கு விஸ்தரிப்பு 10 வது கிராஸ் பகுதியில் பிரசாந்த் அவர்களின் Political leader Trichy மற்றும் புதிய மாத இதழ் அலுவலகம் திறக்கப்பட்டது.




இந்த அலுவலகத்தை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

இச்சேனல் மூலமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்கள் நலப் பணிகள், சமூக சேவைகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிகழ்வுகள் உடனுக்குடன் மக்களிடம் கொண்டு செல்லப்படும். மேலும், முக்கிய செய்திகள், நலத்திட்ட முகாம்கள் மற்றும் சிறப்பு நேர்காணல்கள் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக வீடுதோறும் சென்றடையும்.

இந்த விழாவில் பங்கேற்றோர் பலரும், திரு. பிரசாந்த் அவர்கள் தொடர்ந்து செய்து வரும் கழகத்தின் சமூகச் சேவைகள் மற்றும் எதிர்காலப் பயணத்திற்கு தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்கள் மற்றும் நேரடி மக்கள் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளதை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த விழாவில் மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், தில்லை நகர் பகுதி செயலாளர் கே.எஸ்.நாகராஜன், மண்டல தலைவர்கள், விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி, தில்லைநகர் வட்ட கழக செயலாளர் வாமடம் சுரேஷ், மாமன்ற உறுப்பினர் முத்து செல்வம், மாவட்ட பொருளாளர் துரைராஜ், மாவட்ட அமைப்பாளர் அருண், பகுதி செயலாளர்கள் , துணை அமைப்பாளர், வட்ட பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த youtube சேனல் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவினர் பொதுமக்களிடம் பணி செய்ய சுலபமாக இருக்கும் என்றனர்.

Post a Comment

0 Comments