NEWS UPDATE *** “மதுரை மாநாடு.. மக்கள் சந்திப்பு.. பயணம்.. என இதுக்கப்புறம் தொடர்ந்து மக்களோட மக்களா இருக்கப் போறோம்” தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேச்சு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி பஞ்சப்பூர் "முத்தமிழறிஞர் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை" பொதுமக்கள் பயன்பாட்டிற்க்காக அமைச்சர் கே. என். நேரு தொடங்கிவைத்தார்

திருச்சி பஞ்சப்பூர் "முத்தமிழறிஞர் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில்" பயணிகள் பயன்படுத்தும் வகையில் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.



இதன் பணிகள் தற்போது முழுவதுமாக நிறைவடைந்ததை தொடர்ந்து, பொது மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நகர் மற்றும் புறநகர் பேருந்துகள் சேவைகளை இன்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து, பேருந்து முனையத்தின் செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்ததுடன், பேருந்து நிலையத்தை தினசரி கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.



இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள், மாநகர காவல் ஆணையர் திருமதி. காமினி இ.கா.ப., அவர்கள், மாண்புமிகு மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு. லி.மதுபாலன் இ.ஆ.ப., அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. தீபிசானு இ.ஆ.ப., அவர்கள், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. செ.ஸ்டாலின் குமார் அவர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் நிர்வாக இயக்குநர் க.தசரதன் அவர்கள், மண்டல பொதுமேலாளர்கள் சிங்காரவேலன், சதீஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ர.ராஜலட்சுமி ஆகியோருடன் மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், போக்குவரத்ததுறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments