திருச்சி அரியமங்கலம் ரிலையன்ஸ் பங்க் அருகில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

28.06.2021

ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமையில் திருச்சி அரியமங்கலம் ரிலையன்ஸ் பங்க் அருகில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதுசமயம்  மக்களின் குரலை காது கொடுத்துகேட்காத ஒன்றிய அரசை கண்டித்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் மக்கள் கலை  இலக்கியக் கழகம் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா~ மக்கள்  அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜா~ மக்கள் அதிகாரம் தோழர் ஆனந்த் மக்கள் உரிமை கூட்டணி தோழர் ஜோசப் எஸ். ஐ. டி தரைக்கடை தொழிலாளர் சங்கம் தலைவர் ரபீக்~ செயலாளர் சுப்பிரமணி~ வெல்ஃபேர் பார்ட்டி தொழிற்சங்க தலைவர் சாகுல் ஹமீது~ உட்பட 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் முடிவில் ஜோசப் நன்றி கூறினார்



Post a Comment

0 Comments