வீரன் அழகுமுத்து கோன் குருபூஜை விழா திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பங்கேற்ப்பு !

 
இந்திய சுதந்திர போரட்டவீரன் அழகு முத்துகோன் குரு பூஜை  திருச்சி வெங்காய தரகு வர்த்தக மண்டி சஙகம் சார்பில் தலைவர் வெள்ளையப்பன்  யாதவ் தலைமையில் நடைபெற்றது .

செயலாளர் தங்கராஜ்யாதவ் வரவேற்புரை நிகழ்த்தினார், சிறப்பு அழைப்பாளராக திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர்  இனிகோ  இருதயராஜ்  மதுரை தொழிலதிபர் சோலைமலை பிச்சை யாதவ் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில்பகுதி திமுக செயலாளர்கள் மதிவாணன் ,ராஜசேகர் , ஶ்ரீரங்கம் அறங்காவலர் குழு தலைவர் பொறியாளர் வெங்கடாசலம் , யாதவர் பேரவை ஶ்ரீதர்,வணிக பேரமைப்பு செயலாளர் கோவிந்தராஜுலு ,வியாபார பேரமைப்பு ஶ்ரீதர் ,மக்கள்நீதிமய்யம் கிஷோர்குமார் ,பாரத முன்னேற்ற கழகம் பாரதராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்  முன்னதாக வீரன் அழகு முத்துகோன் உருவபடத்திற்க்கு குத்து விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது


Post a Comment

0 Comments