NEWS UPDATE *** மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கண்டுபிடித்த நாடே இன்னும் வாக்குப்பதிவுக்கு வாக்கு சீட்டு முறையை தான் கடைபிடிக்கிறது.. இந்தியாவிலும் வாக்கு சீட்டு முறை வேண்டும் - செல்வப்பெருந்தகை *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் ஒரே அளவுகோலில் வைத்து சலுகைகளை பாரபட்சமின்றி வழங்க தவறும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்பாட்டம் - தமிழ்நாடு பத்திரிகை ஊடக பாதுகாப்பு சங்கம் தீர்மானம்

திருச்சியில் இன்று 03-09-25 மாலை நடைபெற்ற தமிழ்நாடு பத்திரிகை ஊடக பாதுகாப்பு சங்க மாநில நிர்வாகிகள் சிறப்பு கூட்டம் மாநில தலைவர் அல்லூர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. 



கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1. RNI -ல் பதிவு செய்து வெளிவருகிற அரசியல் சமூக புலனாய்வு பருவ இதழ்களின் நிருபர்கள் தமிழ்நாடு பத்திரிகை நல வாரியத்தில் பதிவு செய்யலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.

2. RNI-ல் பதிவு செய்து வெளிவருகிற புலனாய்வு பருவ இதழ்களின் நிருபர்களுக்கு உரிய மரியாதை தராமல் தங்களுக் சென்று ஒரு வட்டத்தை உருவாக்கி செயல்படும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பாரபட்சமான போக்கினை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

3. காவல் துறையினர் சில வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில் புலனாய்வு பத்திரிக்கையாளர்களின் உதவியை நாடலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கேற்ப புலனாய்வு இதழ் நிருபர்களை பயன் படுத்தி கொள்ள வேண்டும் என்று காவல்துறை உயர் அதிகாரிகளை கேட்டுக் கொள்வதோடு பத்திரிக்கையாளர் களுக்கு இடையிலான பிரச்னைகளை கையிலெடுத்து விசாரணை செய்வது ஏற்கதக்க ஒன்றல்ல என்பதனையும் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு இக்கூட்டம் அறிவுறுத்துகிறது !

4. பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் ஒரே அளவுகோலில் வைத்து சலுகைகளை பாரபட்சமின்றி வழங்க தவறும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்பாட்டம் நடத்துவது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது!

5. அரசு விளம்பரங்கள் புலனாய்வு இதழ்களுக்கும் வழங்க வேண்டும் என்று அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது !

6.அரசு சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வீட்டுமனைகளை புலனாய்வு பத்திரிக்கை நிருபர்களுக்கு வழங்கிட வேண்டுமென்று அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது!



இந்த கூட்டத்தில் வல்லூறு மோகன்ராம் , மனிதவிடியல்  மோகன் , சத்ரியன் தேவா , நெற்றிக்கண் ரமேஷ் , விறுவிறுப்பு தகவல் ரவி , அரசியல் டைம்ஸ் செய்தியாளர் கோபி ,   செய்தியாளர் வீரதுரை மக்கள் மகுடம் மஸ்தான், திருச்சி எக்ஸ்பிரஸ் ஆனந்த்  மற்றும் பத்திரிகை  நிருபர்கள் கலந்துகொண்டு பல்வேறு கருத்துக்களை  பகிர்ந்துகொண்டனர். 




முன்னதாக சுமைதாங்கி இதழ்  ஆசிரியரும் சங்கத்தின்  மாநில துணைதலைவருமான எகியா  வரவேற்புரை நிகழ்த்தினார் .


நிறைவாக அக்னி சிறகு மாத இதழ் ஆசிரியரும் சங்கத்தின்  மாநில பொது செயலாளருமான முகமது இக்பால் நன்றி கூறினார் .

  





Post a Comment

0 Comments