தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மதுரை மாவட்டம் சார்பாக 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 48 மணி நேர வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட தலைவர் இராஜ்குமார் தலைமை தாங்கினார், மாவட்ட இணை செயலாளர் இரா.திவ்யா வரவேற்புரை ஆற்றினார் மாவட்டச் செயலாளர் நா. ரகுபதி கோரிக்கையை விளக்கிக் கூறினார்
முன்னாள் நிர்வாகி ஜெயராஜ், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முகைதீன் அப்துல் காதர், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் இரா.தமிழ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் நீதிராஜா ஆகியோர் தோழமை உரையாற்றினர்
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாநில செயலாளர் இரா. முத்து முனியாண்டி கண்டன உரையாற்றினார், மாவட்ட பொருளாளர் பா.மணிகண்டன் நன்றி உரையாற்றினார்
ஆர்ப்பாட்டத்தில், களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்திட வேண்டும், நில அளவைத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், ஒப்பந்த முறையில் நில அளவையர் நியமனத்தை கைவிட வேண்டும், உயர் அலுவலர்களின் அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
0 Comments