கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை வட்டம் தளி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் சிவாஜி வயது 58) நேற்று இரவு தளி அருகேயுள்ள தொட்ட உப்பனூர் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்ட பொதுமக்கள் தேன்கனிக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி பின் பிரேத பரிசோதனை செய்து காரிமங்கலத்தில் வசிக்கும் அவர் உறவினர்களிடம் பிரேதத்தை ஒப்படைத்தனர், தொடர்ந்து அவருடைய சொந்த ஊரில் இருபத்தியோரு குண்டுகள் முழங்க உடலை தகனம் செய்தனர்.
0 Comments