100 வேலை திட்டத்தில் பணிதளப் பொறுப்பாளர் நியமணம் பற்றிய அரசாணை நிலை என்ன 80 ன் முக்கிய கூறுகள்: GO (ms) No. 80 dt 16.07.2013
பணிதளப் பொறுப்பாளர் ஆவதற்கு...
• ஒருவர் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பாவது படித்திருக்க வேண்டும்.
• மாற்றுத் திறனாளிகளுக்கே முதல் முன்னுரிமை.
• அடுத்த முன்னுரிமை பெண்களுக்கு வழங்கப்படும்.
• தகுதியான மாற்றுத்திறனாளியோ, பெண்களோ இல்லையென்றால் மட்டுமே ஆண்கள் நியமிக்கப்பட வேண்டும்.
• பணியிட தொகுப்பிற்கு (cluster) இருமடங்காக பணிதளப் பொறுப்பாளர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும். (ஊரில் குக்கிராமங்கள் 4 பணியிடமாக தொகுக்கப்பட்டிருந்தால் 8 பணிதளப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்)
• அவ்வாறு நியமிக்கப்பட்ட பணிதளப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட பணிக்கு அப்பணி முடியும் வரை மட்டுமே பணிதளப் பொறுப்பாளராக இருக்க முடியும். (பண்ணைகுட்டை அமைப்பதற்கு ஒருவர் பணிதளப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டால் அப்பண்ணைகுட்டை வேலை முடியும் வரை மட்டுமே அவர் பொறுப்பில் இருக்க முடியும். அடுத்த வேலைக்கு வேறு ஒரு நபர் நியமிக்கப்பட வேண்டும்)
• ஊராட்சியின் குறிப்பிட்ட ஊரில் (habitation) நடக்கும் பணிக்கு நியமிக்கப்படும் நபர் பணி நடக்கும் அந்த ஊரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
• பணிதளப் பொறுப்பாளர்கள் பட்டியல் ஊராட்சி உதவியாளர் மற்றும் உதவி BDO அவர்களால் தயாரிக்கப்பட்டு BDO அவர்களால் சரிபார்க்கப்பட வேண்டும்.
• இப்பட்டியல் கிராம சபையிலோ அல்லது சிறப்பு கிராம சபையிலோ வைத்து ஒப்புதல் பெறப்பட்டிருக்க வேண்டும்.
• அவ்வாறு ஒப்புதல் பெறப்படும் கிராம சபையில் குறைந்த பட்சம் 50% 100 நாள் பணியாளர்களாவது கலந்து கொண்டிருக்க வேண்டும்.
0 Comments