திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம்(கட்சி சார்பற்றது) சார்பில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் இணையவழியில் நடத்தப்படுவதை கண்டித்தும் அவர்களை அழைத்து சமூக இடைவெளியை கடைபிடித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நேரடியாக நடத்தக் கோரியும் ஆர்ப்பாட்டம் விவசாய சங்கத் தலைவர். ம.ப. சின்னத்துரை அவர்களின் தலைமையில் நடைபெற்றது . இதில் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சார்பில் சம்சுதீன், மக்கள் அதிகாரம் சார்பில் ராஜா, தமிழ் தேசிய மக்கள் முன்னணி வழக்கறிஞர் கென்னடி, அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் மகேஸ்வரன், மக்கள் உரிமை மீட்பு இயக்கம் பஷீர் அஹமத், தந்தை பெரியார் திராவிடர் கழகம் கமலக்கண்ணன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கே மாவட்ட ஆட்சியர் நேரடியாக வந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்
0 Comments