NEWS UPDATE *** பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி? விளக்கம் கேட்டு தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் - பள்ளிக்கல்வித்துறை *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக... மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் - திருச்சி

திருச்சி  

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக... மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!.


மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் விவசாய சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் இடையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அரசமரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.


பொறுப்பாளர் சையது முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் பேராசிரியர் மைதீன் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்


. ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் அவர்களும் உரை நிகழ்த்தினார்.


இந்நிகழ்வில் நிர்வாகிகள் முகமது பீர்ஷா, அந்தோணிராஜ்,சேக் அப்துல்லா,கமால்,ஆரிப், முபாரக், ஷேக் மைதீன், 

சையது முகம்மது ,அன்வர்

,வாகித், ஜாகீர்,ஜோயல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


இதில் உறுப்பினர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.



Post a Comment

0 Comments