திருவாரூரில்- மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யகோரி சங்க கூட்டத்தில் தீர்மானம்
திருவாரூரில் மின் ஊழியர் மத்திய அமைப்பு சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு திட்ட தலைவர் சகாயராஜ் தலைமை வகித்தார் . முன்னாள் திட்ட செயலாளர் வி சுப்பிரமணியன், மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ராஜாராமன், திட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்றைய மின்வாரிய நிலைமையும், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். ராஜேந்திரன் விளக்கிப் பேசினார். இதில் மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகிகளும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments